அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார்

அஜித்தின் அம்மா மோகினி கடந்த வாரம் மே 30ம் தேதி மரணம் அடைந்தார். அப்போது துபாயில் இருந்த அஜித் அன்றிரவே சென்னை திரும்பினார். மறுநாள் மோகினியின் உடல் தகனம் நடைபெற்றது.
இந்நிலையில் அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள்ளாக கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள இறங்கியுள்ளார் அஜித்குமார். இது தொடர்பாக அவரது நிறுவனம் பதிவிட்டுள்ளதில், “கனத்த இதயத்துடன் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளேன். வாழ்க்கை தொடர்ந்து நடந்தே ஆக வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மீண்டும் கார் ரேஸிங்கில் இறங்கியுள்ள அஜித்குமார், அவரது அடுத்த பட அறிவிப்பை எப்போது வெளியிடப் போகிறார் என அவரது ரசிகர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.