வெளி மாநிலங்களில் 70 கோடி வசூலித்த கருப்பு

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்த "கருப்பு" திரைப்படம் எதிர்பாராத பெரும் வெற்றியைப் பெற்றது. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என ஒரு வாரத்திற்க்கு முன்பே தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் 175 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது. தமிழகத்தைத் தவிர வெளி மாநிலங்களில் இப்படம் 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழ்ப் படம் ஒன்று ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்படியான வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது.
தெலுங்கில் 35 கோடி, கர்நாடகாவில் 22 கோடி, கேரளாவில் 13 கோடி, வட மாநிலங்களில் 3 கோடி என மற்ற மாநிலங்களிலும் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
தமிழக வசூல் 200 கோடியைக் கடக்குமா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த வார இறுதியில் அது நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.