பிளாஷ்பேக் : நெகட்டிவ் கேரக்டரில் நடித்த மனோரமா
ஜூன் 04, 2026

ஆனந்த ஜோதி பிக்சர்ஸ், அமர்ஜோதி பிக்சர்ஸ் சார்பில் வி.மோகன், வி.நடராஜன், எம்.கலா ஆகியோர் தயாரித்த படம் "தாயா தாரமா". கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சேகர், ரேகா, எஸ்.எஸ்.சந்திரன், ஆனந்த பாபு, டெல்லி கணேஷ், கோவை சரளா, காந்திமதி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். டி.பி.கஜேந்திரன் இயக்கி இருந்தார்.
சினிமாவில் மினிமம் கியாரண்டி கண்டென்ட் என்றால் தாயா, தாரமா தான். ஒரு ஆண் தன் மனைவிக்கும், தாய்க்கும் இடையில் கிடந்து தவிப்பதை எத்தனை கோணத்தில் சொன்னாலும் ரசிக்க முடியும், இதை சீரியசாகவும் சொல்லி பல படங்கள் வந்திருக்கிறது. காமெடியாக சொல்லியும் பல படங்கள் வந்திருக்கிறது. அப்படியான படங்களில் ஒன்று இது.
கே.ஆர்.விஜயாவின் ஒரே மகன் எஸ்.வி.சேகர். மகனுக்கு பைக் வாங்கிக் கொடுத்தால் விபத்தில் சிக்கி விடுவான் என்று கல்லூரி வரைக்கும் சைக்கிள் ரிக்ஷாவில் அனுப்புகிற தாய். மருமகள் என்று ஒருத்தி வந்து விட்டால் தன்னிடமிருந்து மகனை பிரித்து விடுவாளோ என்கிற பயம் அவளுக்கு. கே.ஆர்.விஜயாவின் பயத்துக்கு தூபம் போடுகிறார் மனோராமா.
மகன் எஸ்.வி.சேகருக்கு ரேகாவுடன் திருமணம் நடந்து விடுகிறது. ரேகா ஆரம்பத்தில் நல்லபடியாக இருந்தாலும் கே.ஆர்.விஜயாவின் அதீத பயம் அவரை மாற்றிவிடுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. மனோரமா நெகட்டிவ் கேரக்டரில் நடித்த அரிதான படங்களில் இதுவும் ஒன்று. "தேரெழுந்தூர் சுப்புலட்சுமி பேத்தி சாவித்ரி" என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். கிளைமாக்சில் நல்லவராக மாறிவிடுவார்.
மகளுக்காக ஜெயிலுக்கு போகும் மாமியார், மருமகளால் பாதிக்கப்பட்ட மாமியார், என படத்தில் பலவித மாமியர், மருமகள்களின் கிளைக் கதைகள் மூலம் தாயா தராமா என்ற கருத்தை முன்வைத்து அதற்கான சரியான தீர்வையும் சொன்ன படம்.

Tags
Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.