பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா

படப்பிடிப்பில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் என்னை அமைதிப்படுத்தும் நபராக பிரேம்ஜி இருந்தார். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான நேரங்களில் என்னை என் கூட இருந்து சமாதானப்படுத்தினார் . வெளியுலகில் அவர் எப்படி இருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், எனக்காக எப்போதும் அக்கறை கொண்ட நண்பராகவே இருந்தார். அதாவது, ஒரு நண்பர்கள் குழுவில் அனைவரும் சரக்கு அடித்துவிட்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் போது, ஒருவர் மட்டும் தெளிவாக இருந்து மற்றவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஒரு நண்பர் இருப்பார். அது போன்ற ஒருவர் தான் பிரேம்ஜி.
என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளிலிருந்து என்னை காப்பாற்றியது அவர் தான். ஆனால், நாங்கள் காதலில் இருந்ததாகவும், அதனால் தான் பிரேம்ஜி 45 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்பது வதந்தி தான். அவை அனைத்தும் சினிமா துறையில் வழக்கமாக பரவும் வதந்திகளே தவிர உண்மை இல்லை" என நீண்ட நாள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சோனா .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.