விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இந்த கூட்டணியில் புதிய படம் ஒன்று தற்போது உருவாகிறது. இதனை இயக்குனர் அட்லி தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். முந்தைய படங்களை போன்று இதுவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படம் தான் விஜய் சேதுபதியின் அடுத்த படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுநாள் வரை படத்திற்கு பெயர் எதுவும் வைக்கப்படாத சூழலில் தற்போது "பக்தா" என தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.