அறிவு வந்தால் சினிமா பார்ப்பார்களா?: சிவக்குமார் சர்ச்சை பேச்சு

பழம்பெரும் நடிகரும், சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவக்குமாரும், சத்யராஜும் நேற்று கோவையில் நடந்த ஒரு தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சிவக்குமார் "மக்களுக்கு அறிவு வந்தால் சினிமா பார்ப்பார்களா?" என்றார். அவரது கருத்து தற்போது பரபரப்பாகி உள்ளது.
அவர் மேலும் கூறும்போது “மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம். காமராஜரைப்போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா?. அவரையே தோற்கடித்தார்கள். காமராஜர் வேண்டாம் மாற்றம் வேண்டும் என்று அப்போது மக்கள் நினைத்தார்கள். தற்போது மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள்.
மக்களை அதிகம் ஈர்ப்பவர்கள் சினிமாத்துறையை சார்ந்தவர்கள்தான். சினிமா மூலம் கூறுவது மக்களுக்கு நெருக்கமாகிவிடுகிறது. மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும், சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள். மக்களுக்கு அறிவு வந்தால் எதற்கு படம் பார்க்கிறார்கள்?” என்றார்.























வாசகர்கள் கருத்துகள் (7)
கருத்து எழுதுங்கள்"மக்களுக்கு அறிவு வந்தால் சினிமா பார்ப்பார்களா" சிறிய மாற்றம் "மக்களுக்கு அறிவு இருந்தால் சினிமா பார்த்து அது நிஜம் என்று நம்புவார்களா"
தடய சுவடுகேளே இல்லாததால் அறிந்திடவேஇயலாத தன் பூர்வம் தெலுங்காகியதால், எங்கள் தமிழ் மண்ணின் அரசன் தமிழ் மைந்தனானதால் பிரதிபலிக்கும் வெம்பல். வாழ்க தமிழ். வாழ்க எங்கள் தமிழகம்.
அருமை தமிழக மக்கணுகை எதைக்கொண்டு அடித்தாலும் திருந்த போவதில்லை
போற போக்குல திடீர்னு உண்மையை பேசிடுவார்
அறிவு இல்லாத இவர் நடிப்மதை போது பார்ப்பது ஒன்றும் தவறில்லை
இவனன்க்கு வேறு வேலை இல்லை. இந்த மாதரி இருத்தலால் சினிமாவில் நிலைக்க முடிவதில்லை. இவர் வாயை மூடிக்கொண்டு இருக்க சொல்லவியும்.
கருப்பு படம் ஹிட் ஆகி விட்டதால் உன் பேச்சில் வழக்கம் போல ஒரு மதப்பு. ஏற்கனவே குடும்பமே திமிர் பேச்சில் வாங்கி கட்டினது ஞாபகம் இல்லையா. ரசிகர்களால் சம்பாரித்து ஆன்மீகம் ங்கற பேரில் ஊரை ஏமாத்தி கிட்டு இருக்கிற நீ அறிவு இல்லையா nu solra... தவளை தன் வாயால் கெடும்... Start the music
கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.