பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி
ஜூன் 05, 2026

Advertisement
ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் புச்சிபாபு சனா இயக்கத்தில் நேற்று வெளியான தெலுங்குத் திரைப்படம் "பெத்தி". பான் இந்தியா படமாக வெளியான இப்படம் முதல் நாள் வசூலாக 135 கோடியே 36 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது வரை வெளியான தெலுங்குப் படங்களின் முதல் நாள் வசூலில் இதன் மூலம் 9வது இடத்தை இந்தப் படம் பிடித்துள்ளது. முதலிடத்தில் 285 கோடி வசூலுடன் "புஷ்பா 2", 235 கோடியுடன் 2வது இடத்தில் "ஆர்ஆர்ஆர்", 215 கோடியுடன் 3வது இடத்தில் "பாகுபலி 2", 183 கோடியுடன் 4வது இடத்தில் "கல்கி 2898 ஏடி", 167 கோடியுடன் 5வது இடத்தில் "சலார்", 157 கோடியுடன் 6வது இடத்தில் "தேவரா 1", 145 கோடி வசூலுடன் 7வது இடத்தில் "ஓஜி", 137 கோடியுடன் 8வது இடத்தில் "ஆதி புருஷ்" ஆகிய படங்கள் உள்ளன.
இன்றும் இப்படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை, நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த வார இறுதியில் இப்படம் மேலும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!