8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி
ஜூன் 05, 2026
Advertisement
சந்தானம் நடித்த "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆஸ்னா ஜவேரி. அதன் பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்தார். கடைசியாக 2018ம் ஆண்டு வெளியான "இவனுக்கு எங்கேயோ மச்சம்" இருக்கு படத்தில் விமல் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு "கன்னித்தீவு" என்ற படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது 8 வருடங்களுக்கு பிறகு "வள்ளுவன்" என்ற படத்தின் மூலம் நாயகியாக திரும்பி வந்திருக்கிறார். இந்த படம் வருகிற 12ம் தேதி வெளிவருகிறது.
இதனை அறிமுக இயக்குநர் சங்கர் சாரதி இயக்கி உள்ளார். சேத்தன் சீனு நாயகனாக நடித்துள்ளார். அஷ்வத் இசை அமைத்துள்ளார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆறுபடை புரொடக்ஷன் சார்பில் ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!