
கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி
இப்போது இவர்களுடன் நடிகை அம்மு அபிராமியும், ‛பசங்க" புகழ் கிஷோரும் இணைந்திருக்கிறார்கள். இருவரும், விஜய் மில்டன் இயக்கிய "கோலி சோடா ரைசிங்" வெப் சீரிஸில் இணைந்து நடித்தனர். இப்போது இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் மில்டன் கூறும்போது "அம்முவும், கிஷோரும் தங்கள் கதாபாத்திரங்களை உண்மையின் அடிப்படையில் அற்புதமாக காட்டக்கூடிய திறமை கொண்டவர்கள். அவர்கள் நடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இந்தப் படத்துக்கு தரும் உயிர் துடிப்பை ரசிகர்கள் விரைவில் அனுபவிக்க இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!