தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி
மார் 08, 2026

"டியூட்" என்ற தமிழ் படத்தில் நடித்த நடிகை, தற்போது, "மெகா ஹீரோ"களுக்கு ஜோடியாகி விட்டார். ஆனால், ஆரம்பத்தில் குறைந்த படக்கூலியில் தான் ஒப்பந்தமாகி இருந்த, இரண்டு படங்களுக்கு வாங்கியிருந்த, "அட்வான்ஸை" திருப்பி கொடுத்து விட்டார். ஆனால், "அட்வான்ஸ் வாங்கிய படத்தில், பேசிய சம்பளத்தில் நடித்து கொடுத்தாக வேண்டும்..." என்று தயாரிப்பாளர் ஒருவர், டியூட் நடிகை மீது, "தயாரிப்பாளர் கவுன்சிலில்" புகார் அளித்து விட்டார்.
எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்ட நடிகை, "இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் புதிதாக, "புக்" பண்ண வருபவர்களும், அதே குறைந்த சம்பளமே பேசுவர். அதனால், இந்த விவகாரத்தை வெளியில், "லீக் அவுட்" செய்து விடாதீர். யாராவது கேட்டால், ஐந்து கோடி ரூபாய் சம்பளம் என, எனக்காக ஒரேயொரு பொய்யை மட்டும் சொல்லி, என்னை காப்பாற்றுங்கள்..." என்று, தயாரிப்பு தரப்பினரிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார், நடிகை.
Advertisement
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.