ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை
ஏப் 06, 2025

காதல் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றுவிட்ட, பாணா காத்தாடி நடிகைக்கு, அவ்வப்போது சில சினிமா புள்ளிகள், "ஐ லவ் யூ மெசேஜ்" அனுப்பி, "ப்ரபோஸ்" செய்வதுடன், போன் செய்தும், "டார்ச்சர்" கொடுத்து வருகின்றனர்.
இதுபோன்ற நபர்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, சமீபத்தில், "மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமலேயே நான், தனித்தே வாழ்ந்து காட்டப் போகிறேன்..." என, ஒரு பேட்டி கொடுத்தார், அம்மணி. இருப்பினும், அந்த ரோமியோக்கள் அவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, சினிமா வட்டாரங்களில் கொடுத்திருந்த தன் மொபைல் நம்பரை மாற்றி, தற்போதைய புதிய நம்பரை ரகசியமாக வைத்திருக்கிறார், பாணா காத்தாடி நடிகை.
Advertisement
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.