வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர்
மார் 08, 20260

வெற்றிகரமான இயக்குனரின், நார்த் மெட்ராஸ் கதைக்களத்தில் நடிக்கும், வம்பு நடிகர், முதலில் தான் மட்டுமே, "ஹீரோ" என்பதால் உற்சாகமாக இருந்தார். ஆனால், இப்போது அப்படத்தில், பீட்சா நடிகரும் இன்னொரு, "ஹீரோ"வாக களம் இறக்கப்பட்டு இருப்பதால் கடுப்பில் இருக்கிறார். காரணம், முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை, பீட்சா நடிகர் பக்கம் திருப்பி உள்ள இயக்குனர், வம்பு நடிகரின் காட்சிகளை குறைத்து அவரை, "டம்மி" பண்ணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை மோப்பம் பிடித்த, வம்பு நடிகர் செம காண்டாகி விட்டார். "கதை சொன்னது போலவே என் கதாபாத்திரத்தையும் படத்தில் வைக்க வேண்டும். ஒரு காட்சி காணாமல் போயிருந்தாலும், "டப்பிங்" பேச மாட்டேன்..." என்று இயக்குனருக்கு, "ஷாக்" கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.