பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர்
பிப் 20, 2026

மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஒரு சில திரைப்படங்களைத்தான் பார்த்துள்ளார். ஆனால் நாடகம் பார்க்க ஆர்வம் கொண்டவர். "ஹரிச்சந்திரா" நாடம்தான் தன் வாழ்வின் திருப்புமுனை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
காந்தி ஒரு முறை மதுரை வந்தபோது அங்கு நவாப் ராஜமாணிக்கம் குழுவினரின் " நந்தனார்" நாடகம் நடந்தது. அதை பார்க்க காந்தி சென்றார். அந்த நாடகத்தில் 12 வயது சிறுவர்களான கே.வி. ஸ்ரீனிவாசன், ஐயம்பேட்டை நாராயணசாமி மற்றும் ஆழ்வார் கோவிந்தன் ஆகியோர் "வைஷ்ணவ ஜனதோ" பாடலைப் பாடி ஆடினர். நாடகம் முடிந்தும், காந்தி கே,வி. ஸ்ரீனிவாசனை அழைத்து அவர் தலைமீது கை வைத்து "அச்சா" என்றார். அந்த வகையில் காந்தி பாராட்டிய ஒரே நடிகர் ஆனார் ஸ்ரீனிவாசன்.
இந்த ஸ்ரீனிவாசன்தான் பிற்காலத்தில் என்.டி.ராமராவின் தமிழ் குரலாக ஒலித்தார். "கர்ணன்" உள்ளிட்ட என்.டி.ராமராவின் தமிழ் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் இந்த ஸ்ரீனிவாசன். என்டிஆரை தமிழ் படத்திற்கு புக் பண்ண சென்றாலோ, அல்லது டப் செய்தாலோ ஸ்ரீனிவாசனிடம் பேசி விட்டீர்களா என்றுதான் என்டிஆர் கேட்பாராம்.
ஸ்ரீனிவாசன் வெறும் டப்பிங் கலைஞர் மட்டுமல்ல நல்ல நடிகரும்கூட. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பல படங்களில் வக்கீலாக வந்திருக்கிறார். அதனால் அந்த சமயங்களில் இவரை "வக்கீல் சீனிவாசன்" என்று அழைப்பதுண்டு.
ஆயிரம் ரூபாய், படித்தால் மட்டும் போதுமா, வாழ்வு என் பக்கம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, குலமா குணமா, என்னதான் முடிவு, நினைவில் நின்றவள், கல்யாணியின் கணவன், மாங்கல்யம், உயிரா மானமா, கை கொடுத்த தெய்வம், கண்ணம்மா போன்றவை இவர் நடித்த சில முக்கியமான படங்கள்.

Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.