பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார்
பிப் 20, 2026

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சரத்குமார் தற்போது 150 படங்களை தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் பல சினிமா வாய்ப்புகள் தேடியும் கிடைக்காததால் தானே ஒரு படத்தை தயாரித்து நடிகர் ஆனார். ஆனாலும் அந்தப் படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை. ஹீரோ கார்த்திக் அந்த படம்தான் சரத்குமாரின் முதல் படமான "கண்சிமிட்டும் நேரம்".
கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய இந்த படத்தில் அம்பிகா, நாயகியாக நடித்தார், ரோஷினி, குட்டி பத்மனி உள்ளிட்ட பலர் நடித்தனர். இதில் சரத்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். 1988ல் இந்த படம் வெளிவந்தபோது படம் வெளியான தியேட்டர்களுக்கு சாதாரண இளைஞராக சென்று ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்து படத்தை பற்றி குறிப்பாக தனது நடிப்பை பற்றி ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தார். கார்த்திக்கை விட சரத்குமாரின் கேரக்டரும், நடிப்பும் பேசப்பட்டதால் தொடர்ந்து நடிப்பது என்பதை சரத்குமார் முடிவு செய்தார்.

Tags
Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.