ஓடிடி பார்முலாவுக்குள் சிக்கியுள்ள நவரசா டிரைலர்

இதற்கு முன்பு வெளிவந்தவற்றில் கூட சில பல பிரச்சினைகளைக் சுற்றிய கதைகளைத்தான் சொன்னார்கள். சுவாரசியமான கதைகளாக அவை இல்லை என்பது சாமானிய ரசிகர்களுக்கு குறையாக இருந்தது. அந்த வரிசையில்தான் இப்போது நவரசா டிரைலரும் இடம் பெற்றுள்ளது.
நவரசங்களின் அடிப்படையில் ஒன்பது உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த 9 கதைகளில் எது ரசிகர்களிடம் சென்றடையப் போகிறது என்பது வெளியான பிறகு தெரிந்துவிடும்.
9 Stories, 9 Emotions and one incredible journey. #NavarasaOnNetflix#ManiSir @JayendrasPOV @Suriya_offl @VijaySethuOffl @Actor_Siddharth @thearvindswami @nambiarbejoy @menongautham @karthicknaren_M @karthiksubbaraj @priyadarshandir pic.twitter.com/pSnhi7MEyq
— Netflix India South (@Netflix_INSouth) July 27, 2021
சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, சித்தார்த், பிரசன்னா, பாபி சிம்ஹா, அதர்வா, யோகி பாபு, ரேவதி, ரோகிணி, அஞ்சலி, இயக்குனர்கள் பிரியதர்ஷன், வசந்த், என கௌதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், எத்தனை பிரபலங்கள் இருந்தாலும், கதையும், சொல்லும் விதமும்தான் ரசிகர்களை ஈர்க்கும் என்பது இதைத் தயாரித்துள்ள இயக்குனர் மணிரத்னம், ஜெயேந்திரா கூட்டணிக்கு நன்றாகவே தெரியும்.
இந்த நவரசா உருவாக்கத்தில் இருக்கும் போதே சில பல மாற்றங்கள் அதிரடியாக நடந்துள்ளன. அந்த மாற்றங்கள் படத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை பார்க்கும் போதுதான் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், இந்த டிரைலரில் 9 படக் காட்சிகளையும் மாற்றி மாற்றி ஒரே டிரைலருக்குள் அடக்கியுள்ளதால் எதைப் பற்றி சொல்லப் போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.