
‛துணிவு டிரைலரை முந்தாத ‛வாரிசு டிரைலர் - டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்
இந்நிலையில் விஜய்யின் ‛வாரிசு" பட டிரைலர் நேற்று மாலை 5 மணி அளவில் வெளியானது. வெளியான ஒரு மணிநேரத்திலேயே அதிகமான பார்வைகளை பெற்று வந்த இந்த டிரைலர் 24 மணிநேரத்தில் 23.5 மில்லியன் பார்வைகளையும், 1.8 மில்லியன் லைக்குகளை மட்டுமே பெற்றது. இதன்மூலம் விஜய்யின் பட டிரைலரை அஜித்தின் பட டிரைலர் முந்தி சாதனை படைத்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #UnbeatableThunivuTrailer என்ற ஹேஷ்டாக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர்.
தற்போது வரை துணிவு பட டிரைலர் 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. விரைவில் விஜய்யின் ‛பீஸ்ட்" பட டிரைலர் 9 மாதங்களில் செய்த 6 கோடி பார்வைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!