என் 4 படத்தில் அக்ஷய் கமல் : வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்

இந்நிலையில், அக்ஷய் கமல் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் 4 என்கிற திரைப்படத்தில் அக்ஷய் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இதில் சின்னத்திரை நடிகர்களான மைக்கேல், கேப்ரில்லா செல்லஸ், வினுஷா தேவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அக்ஷய் கமலுக்கு ஜோடியாக இன்ஸ்டாகிராம் வைரல் அழகி பிரக்யா நக்ராவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் அக்ஷய் கமல் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் அனைவரும் அவரது சினிமா கேரியர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.