
அப்பா ஆசையை நிறைவேற்ற திருமணத்துக்கு நயன்தாரா சம்மதம்
அந்தவகையில், சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றார். விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த பயணம் நயன்தாரா தந்தையின் உடல்நலனையும் சேர்த்து ஒரு செய்தி உலவுகிறது. இதனால் தான் அவசரமாக தனிவிமானம் மூலம் நயன்தாரா கொச்சி சென்றது கூட தந்தையின் உடல்நலம் குன்றியதால் தான் என்றும் கூறப்படுகிறது.
நயன்தாராவின் அப்பா, மகளைத் திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதுகுறித்து பலமுறை அவரிடம் பேசியும் நயன்தாரா சாதகமான முடிவு எதையும் கூறவில்லையாம். ஆனால் தற்போது தந்தையின் ஆசையை நிறைவேற்ற திருமணத்துக்கு ஒப்புக் கொண்டு விட்டார் என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!