சம்பளத்தை குறைக்க மாட்டேன் - பீஸ்ட் நாயகி கறார்
ஜூலை 06, 2021
Advertisement
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த "முகமூடி" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் "பீஸ்ட்" படம் மூலம் தமிழுக்கு வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
தெலுங்கில் கைவசம் "மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், ஆச்சார்யா, ராதே ஷ்யாம்" ஆகிய படங்கள் பூஜா நடித்து அடுத்தடுத்து வெளிவர உள்ளன. அங்கு தற்போதைக்கு இவர் தான் நம்பர் 1 கதாநாயகியாக இருக்கிறார். மேலும், அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
சமீபத்தில் முன்னணி தெலுங்கு நிறுவனம் ஒன்று அவர்களது படத்தில் நடிப்பதற்காக பூஜாவை அணுகியதாம். சம்பள விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம் பேரம் பேசியிருக்கிறது. ஆனால், தனது சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாயைக் கூட குறைக்க மாட்டேன் என கறாரா பதிலளித்தாராம் பூஜா.
அதே நிறுவனம் அப்படத்தில் நடிப்பதற்காக ஒரு நடிகருக்கு பெரும் தொகையை சம்பளமாக வழங்குகிறதாம். அவருக்கு ஒரு நியாயம், தனக்கொரு நியாயமா என பொங்கிவிட்டாராம் பூஜா.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!