
டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan”
இதனிடையே, அஜித்தின் 62வது படத்தின் இயக்குனர் மாற்றப்படலாம் என்றும், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக வேறு ஒரு இயக்குனர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, டுவிட்டரில் சற்று முன் “#JusticeforVigneshShivan” என சிலர் டிரெண்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், விக்னேஷ் சிவனை அஜித் தன் படத்திலிருந்து நீக்கக் கூடாது என்றும் அவர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவருதற்கு முன்பாக இப்படி டிரெண்டிங் வரை அஜித் 62 படம் பற்றி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!