
அஜித் 62 குழப்பத்திற்கு என்ன காரணம்?
"துணிவு" படம் வந்து பெரும் வெற்றி பெற்ற பிறகு அஜித்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்தும் ஆக்ஷன் படமாகக் கொடுப்பதுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்று யோசிக்கிறாராம். விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படங்களாகத்தான் இருக்கும். அவர் ஆக்ஷன் படங்களை இயக்கியது கிடையாது.
எனவே, அதிரடியான ஆக்ஷன் படத்தை கொடுக்கக் கூடிய இயக்குனரின் படத்தில் நடிக்கலாம் என்பதுதான் அந்த முடிவாம். அஜித் 62க்கு வேறு ஒரு இயக்குனர், அதற்குப் பிறகு வேண்டுமானால் அஜித் 63க்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
தற்போது அஜித், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் லண்டனில் லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரனுடன் பேசி வருகிறார்களாம். ஓரிரு நாட்களில் யார் யார் எந்தப் படம் என்பது குறித்து அறிவிப்பு வரலாம் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!