கொரோனா தடுப்பூசி எடுத்த பின்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராதிகா, நக்மா

அந்தவகையில் நடிகை ராதிகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து சட்டசபை தேர்தலில் பிரச்சார் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று செக் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.
இவரைப்போன்று நடிகை நக்மாவும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.