“எனக்குக் கொரானோவா” : அஞ்சலி மறுப்பு
ஏப் 08, 2021

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. அவர் தெலுங்கில் நடித்துள்ள "வக்கீல் சாப்" படம் நாளை வெளியாக உள்ளது. அப்படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகையான நிவேதா தாமஸ் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அஞ்சலியும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அஞ்சலி. “எனது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களும், அன்பான ரசிகர்களுக்கும், எனக்கு கொரானோ பாதிப்பு இல்லை, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குக் கொரானோ என சில செய்திகள், இணையதங்களில் வெளிவந்துள்ளன என்பது என் கவனத்திற்கு வந்துள்ளது. எனக்கு கொரானோ பாசிட்டிவ் என்பது முற்றிலும் தவறான ஒரு தகவல். நான் முற்றிலும் நலமாகவும், பாதுகாப்பாகவும், உள்ளேன். நீங்களும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

டேக்குகள்
Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.