200 மில்லியன் பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி
ஜூன் 04, 2026

கென் கருணாஸ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்ற படம் "யூத்".
இப்படத்தில் இடம் பெற்ற "முட்ட கலக்கி" பாடல் தற்போது யு டியுப் தளத்தில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கென் கருணாஸ் எழுதி பாடிய பாடல் இது.
கடந்த பிப்ரவரி மாதம் யு டியூப் தளத்தில் வெளியான இந்தப் பாடல் சுமார் 4 மாதங்களில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பாடல்களில் 200 மில்லியனைக் கடந்துள்ள இரண்டாவது பாடல் இது. இந்த ஆண்டில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள முதல் பாடல்.
கடந்த வருடம் வெளிவந்த "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படத்தில் இடம் பெற்ற "கோல்டன் ஸ்பாரோ" பாடல் ஜிவியின் முதல் 200 மில்லியன் பாடல். அது தற்போது 294 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.