மும்பை அருகே நிலம் வாங்கிய யஷ்

தொடர்ந்து ஹிந்திப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதனால், மும்பை அருகே அலிபாக் என்ற கடலோரப் பகுதியில் சுமார் 25 கோடி கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சில ஹிந்தி சினிமா பிரபலங்கள் அப்பகுதியில் பார்ம் ஹவுஸ் வைத்துள்ளார்களாம்.
அலிபாக் தாலுகாவில் கமத் என்ற கிராமத்தில் கிஹிம் பீச் பகுதியில், சுமார் 5200 சதுர மீட்டர் அளவு கொண்ட அந்த நிலத்தில் வீடு ஒன்றும் இருக்கிறதாம். நிலத்தின் கிழக்குப் பகுதியில் கிராமத்து சாலையும், மேற்குப் பகுதியில் கடலும் இருப்பதால் அதன் மதிப்பு அதிகம் என்கிறார்கள்.
யஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட் பெயரில் அந்த இடங்கள் கடந்த மே மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.