ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே

இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "திரைத் துறையினருக்கு உயிர் தருவதே ரசிகர்கள் தான். சில நேரங்களில் அவசரமான சூழ்நிலைகள் அல்லது அதிக கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களை கவனிக்க முடியாமல் போகிறது. அதற்காக நாங்கள் தலைக்கனம் கொண்டவர்கள் என்று அர்த்தம் இல்லை. ரசிகர்கள் தான் எங்களின் பலம். எப்போதும் எங்களுக்கு தெய்வங்களை போன்றவர்கள். எனவே இது போன்ற சம்பவங்களை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை பொருட்படுத்தாமல் பூஜா சென்றார். அதை சிலர் விமர்சித்தனர். அதற்காக தான் இப்படியொரு விளக்கத்தை அவர் தந்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.