
கருப்பு ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா
சூர்யா, திரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் "கருப்பு". 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜிகே விஷ்ணுவுக்கு படத்தின் நாயகன் சூர்யா கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார். "மஹிந்திரா பேட்மேன்" மாடல் காரான இதன் விலை சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையில் இருக்கிறது.
புதிய காரின் முன் நிற்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து ஜிகே விஷ்ணு, “கடவுளின் செயல்…நன்றி சூர்யா சார்…உங்களுக்குப் பெரிய மனம்,” என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் விஷ்ணுவுக்கு தங்களது வாழ்த்துகளை கமெண்ட்டில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஜிகே விஷ்ணு இதற்கு முன்பு விஜய் நடித்த "மெர்சல், பிகில்" ஆகிய படங்களுக்கும், ஹிந்தியில் "ஜவான்" படத்திற்கும், தெலுங்கில், "கிராக், கிலாடி, ராவணசுரா" படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் "ராக்கா" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கும், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும் சூர்யா கார்களை பரிசளிப்பாரா என ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
சூர்யாவின் முதல் 300 கோடி படம் என்பதால் அவை நடந்தாலும் நடக்கலாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!