மகளுக்கு திருமணம் : பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு, சுந்தர் சி

இதுபற்றி குஷ்பு வெளியிட்ட பதிவில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கும் பெருமை எங்களுக்கு கிடைத்தது. நானும், என் கணவர் சுந்தர் சியும் எங்கள் மகளின் திருமண பத்திரிகையை அவரிடம் வழங்கி, திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். என் மகள், ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் என்பவரை மணக்க இருக்கிறார். எங்களது அழைப்பை ஏற்று, பிரதமர் மணமக்களை மனதார வாழ்த்தினார். அவரது பிஸியான நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். இந்த சந்திப்பு எங்களை மிகவும் நெகிழச் செய்ததுடன், பெருமையடையவும் செய்துள்ளது. பிரதமருக்கு மிக்க நன்றி"" என குறிப்பிட்டுள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.