நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது தாயார் மோகினி மணி, கோல்கட்டாவை சேர்ந்த சிந்தி சமூகத்தை சேர்ந்தவர். அஜித் உடன் வசித்து வந்த அவர் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் காலமானார்.
தாய் இறந்த சமயத்தில் அஜித் துபாயில் இருந்தார். அன்னையின் மறைவு செய்தி கேட்டு சென்னை விரைந்தார் அஜித். கடந்த 2023ல் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் காலமானார். சுப்பிரமணியம் - மோகினி தம்பதியருக்கு அஜித் குமார், அனில் குமார் மற்றும் அனுப் குமார் என மூன்று மகன்கள் உள்ளனர்.
நடிகர் அஜித்தின் சென்னை, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் மோகினியின் இறுதித்சடங்கு நடக்க உள்ளது. அஜித் தாயார் மோகினி மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாளை இறுதிச்சடங்கு
அஜித்குமார் தாயாரின் இறுதி சடங்கு நாளை காலை 8:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அஞ்சலி
அஜித்தின் தாயார் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ் மோகன் நேரல் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திரைப்பிரபலங்கள் அஞ்சலி
நடிகர்கள் சரத்குமார், நாசர், இயக்குனர்கள் ஷங்கர், ஏஎல் விஜய், சிவா உள்ளிட்ட திரைபிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை வந்த அஜித்தாயாரின் மறைவு செய்தி கேட்டு துபாயிலிருந்து உடனடியாக கிளம்பிய அஜித் இரவு 8 மணியளவில் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக ஈஞ்சப்பாக்கம் இல்லத்திற்கு சென்றார்.























வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்குடும்பத்தினற்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.