விஜய்சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லி

பாலிவுட் இயக்குநராகிவிட்ட அட்லி, தமிழில் "சங்கிலி புங்கிலி கதவத்திற" என்ற படத்தை தயாரித்தார். சமீபத்தில் இந்தியில் "பேபி ஜான்" படத்தை தயாரித்தார். தற்போது மீண்டும் தமிழ் படம் தயாரிக்கிறார். அட்லியும், அவரது மனைவி பிரியாவும் இணைந்து நடத்தும் "ஏ பார் ஆப்பிள்" நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார். ஏற்கெனவே அட்லி இயக்கிய இந்திப் படமான ஜவானில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தற்போது அட்லி, அல்லு அர்ஜுனை வைத்து "ராக்கா" என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்கள். அடுத்து சல்மான்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்க இருக்கிறார்.
இதனால் தமிழ்பட தயாரிப்பை பிரியா கவனித்துக் கொள்ள இருக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.