
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கிச்சா சுதீப்
வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி என்பவர் தற்போது "அண்டர் 18" என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ராந்த் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்ற நிஜமான குற்றச் சம்பவங்களின் பின்னணியை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு துணிச்சலான போலீஸ் கதாபாத்திரத்திலும், விக்ராந்த் ஒரு உடற்பயிற்சி ஆசிரியராகவும் நடிக்கின்றனராம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!