முதல்வர் விஜய் இரட்டை வேடம் போடுங்க : கூல் சுரேஷ் திடீர் வேண்டுகோள்

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில் ‛‛உங்கள் நம்பி பலர் ஓட்டு போட்டு இருக்காங்க விஜய் சார். இனி, நீங்க இரட்டை வேடத்தில் இருக்கணும். பாதிப்பேருக்கு முதல்வருக்கு, பாதிப்பேருக்கு ஹீரோவாக இருங்க. தவறு நடக்கும் இடத்தில் ராபின்ஹூட் ஆக மாறுங்க. நான் சிகப்பு மனிதன் படத்தை உங்கள் தந்தை எஸ்.ஏ.சி இயக்கினார். அந்த படத்தில் ரஜினிகாந்த் பகலில் வாத்தியாராக, இரவில் தவறுகளை தட்டி கேட்பவராக இருப்பார். அந்த மாதிரி நீங்களும் மாறணும். அப்பதான், நாட்டுல குற்றங்கள் குறையும்.
நாட்டில் கொடியவர்களால் நடக்கும் சில பாலியல் கொடுமைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை என்கிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது .பாலியல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நெற்றியில் பாலியல் குற்றவாளி என்று பச்சை குத்த வேண்டும். இப்போது போலீஸ் எது செய்தாலும் குறை சொல்வது ஒரு பழக்கமாகிவிட்டது. போலீஸ் மீது பழி போடாதீர்கள். அவர்களும் மனிதர்கள் தான்.எதற்கெடுத்தாலும் அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்கள் நமக்காகப் பாடுபடுபவர்கள் "என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.