கிளிம்ப்ஸ் வீடியோவில் புதிய சாதனை படைத்த டிராகன்

அந்த விதத்தில் இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோக்களில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற வீடியோவாக "டிராகன்" கிளிம்ப்ஸ் வீடியோ புதிய சாதனை படைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த வீடியோவிற்கு 36.7 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. அனைத்து மொழிகளையும் சேர்த்து 64 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதுவரையில் 36 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் இருந்த "டாக்சிக்" வீடியோவை அது முறியடித்துள்ளது. 3ம் இடத்தில் "பெத்தி", 4ம் இடத்தில் "வேர் இஸ் புஷ்பா", 5ம் இடத்தில் "தேவரா", 6ம் இடத்தில் "ஜனநாயகன் பர்ஸ்ட் ரோர்" ஆகியவை உள்ளன.
கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல், ஜுனியர் என்டிஆர் இணைந்துள்ள "டிராகன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2027ம் ஆண்டு ஜுன் 11ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.