முடிந்தது தேர்தல் : ஜனநாயகன் ரிலீஸ் அறிவிப்பு வருமா ?

அதனால், விரைவிலேயே "ஜனநாயகன்" படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வருமா என விஜய் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்துள்ளனர். இருந்தாலும் சமீபத்தில் இப்படம் இணையதளங்களில் முழுமையாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவும் படத்தின் தாமதம் காரணமாகவும் படத்தின் வியாபாரம் தற்போது மறு பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது.
இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட்டு அதன்பின்பே படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும் என்கிறார்கள். மே 4 தேர்தல் முடிவுகள் வந்த பின்பு படம் வெளியானால் அது பரபரப்பை ஏற்படுத்தாது. மீண்டும் திமுக ஆட்சியே வந்தால் சொல்லவே வேண்டாம். விஜய் மீதுள்ள திமுகவின் கோபத்திற்கு தாங்களும் ஆளாக வேண்டாம் என தியேட்டர்காரர்கள் படத்தை வெளியிடுவதைத் தவிர்க்க வாய்ப்புண்டு. அதற்கு முன்னதாக படத்தை வெளியிடவும் வாய்ப்பில்லை. பத்து நாட்களுக்கும் குறைவான இடைவெளியில் அது சாத்தியமில்லை.
"ஜனநாயகன்" படத்தின் வியாபாரம் முன்பை விட பாதி அளவிற்காவது குறைத்து பேசப்படும் என்றுதான் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அப்படி நடந்தால் அது தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். எனவே, அதை சரிக்கட்ட மீண்டும் அந்நிறுவனத்திற்கு விஜய் படம் ஒன்றை நடித்துக் கொடுப்பார் என்றும் சொல்கிறார்கள். ஆக, இப்போதைக்கு "ஜனநாயகன்" வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவர வாய்ப்பில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே வரும் என்றும் ஒரு தகவல் உள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.