பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு
பிப் 24, 2026
Advertisement
வீணை பாலசந்தர் என்கிற எஸ்.பாலசந்தர் இயக்கிய படம் "அவன் அமரன்". கம்யூனிச சித்தாந்தங்களை மையமாகக் கொண்டு வெளிவந்த முதல் படம். ஒரு மில் முதலாளி செய்யும் கொடுமைகளும், அதற்கு எதிராக நடக்கும் தொழிலாளர் போராட்டங்களும் தான் படத்தின் கதை களம்.
படத்தின் கதை, வசனத்தை எழுதியதுடன், படத்தை தயாரித்தவர் நாகர்கோயில் நாகராஜன். மில் முதலாளியாக டி.எஸ். பாலையா நடித்தார். அவரை எதிர்த்து போராடும் தொழிலாளர் சங்க தலைவர் கே.ஆர். ராமசாமி நடித்தார், அவரது காதலி லல்லியாக ராஜசுலோசனாவும், தாய் மரியம்மாளாக கண்ணாம்பாவும் நடித்திருந்தனர்.
சிக்கலான அரசியல் கருத்துக்களை படம் பேசியதால் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்முறை படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் 72 இடங்களில் கட் கொடுத்தனர். இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டது. அங்கு 72 கட்டுகள் 52 ஆக குறைக்கப்பட்டன. அதுவும் அதிகம் என்பதால் தயாரிப்பாளர் வேறு வழிகளில் முயற்சியைத் தொடர்ந்தார்.
அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, பாலச்சந்தரின் வீணை இசைக்கு பெரிய ரசிகர். பாலச்சந்தர் தனது செல்வாக்கை பயன்படுத்தி இறுதியில் படத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு திரையிட்டுக் காட்டினார்.
நேரு படத்தைப் பார்த்த பின் கட் செய்ய வேண்டிய எண்ணிக்கை 52 இல் இருந்து 35 ஆக குறைக்கப்பட்டு படம் திரைக்கு வந்தது. இந்த சிக்கலால் படம் வெளியாவது ஆறு மாதங்களுக்கு மேல் தள்ளிப் போனது. மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இந்த படம் தோல்வி அடைந்தது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!