ரணபலி ஆக விஜய் தேவரகொண்டா

இது பீரியட் டிராமா ஜானரில் உருவாகிறது. இந்த அறிமுக வீடியோவின் படி பார்த்தால், இப்படம் 1876ம் ஆண்டு காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியில் ஆங்கிலேயர் ஆட்சி காலகட்டத்தில் தென்னிந்தியாவில் அவர்கள், இந்தியர்களின் நிலத்தை கைப்பற்றியது என பல விஷயங்கள் குறித்து பேசுவது போல் தெரிகிறது. மேலும், இப்படத்தை "தி கர்ஸ்ட் லேண்ட் சப்த பூமி" என்கிற நாவலை தழுவி உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது .
இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தி மம்மி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அர்னால்ட் வோஸ்லு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 11ம் தேதியன்று 5 மொழிகளில் திரைக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.