
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி
பிரதமர் மோடி, தமிழில் பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்துகளுக்கு ரஜினிகாந்த், “எனது அருமை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், இனிய வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
“என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,” என தமிழக முதல்வருக்கும், “என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி,” என கமல்ஹாசனுக்கும், நன்றி தெரிவித்துள்ளார்.
பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய், ரஜினிகாந்த்திற்கு எந்தவித வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!