
இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் படையப்பா
இந்த வாரப் படங்களாக நேற்று, “மகாசேனா, மாண்புமிகு பறை, வெற்றிக்கு ஒருவன், யாரு போட்ட கோடு” ஆகிய நேரடி தமிழ்ப் படங்களும் "அகண்டா 2" டப்பிங் படமும், ரீரிலீஸ் படமாக ரஜினிகாந்த் நடித்த "படையப்பா" படமும் வெளியாகின.
புதிய நேரடி தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பில்லை. "மகாசேனா" படத்திற்குக் குறைந்த அளவிலான முன்பதிவு நடந்து வருகிறது. "அகண்டா 2" டப்பிங் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழில் இல்லை.
இந்த வாரம் வெளியான ரீ ரிலீஸ் படமான "படையப்பா" படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான முன்பதிவு நடந்து வருகிறது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று பல தியேட்டர்களில் சில காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவும் நடந்துள்ளதாம். புதிய படங்களைக் காட்டிலும் இந்த ரிரிலீஸ் படம் தியேட்டர்களை இந்த வாரம் காப்பாற்றுகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!