திட்டமிட்டபடி இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ்

இதனிடையே, "இந்தியன் 2" படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து கடந்த பத்து நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அதிக விலை கொடுத்து ஓடிடி நிறுவனம் வாங்கியது, படம் தோல்வி என்பதால் விலையைக் குறைக்கச் சொல்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். அதனால், படத்தை ஓடிடியில் வெளியிடுவதில் சிக்கல் எனவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், திட்டமிட்டபடி படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி ரிலீஸ் என்பது முடிவுகியுள்ளது என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் ஆகஸ்ட் 9ம் தேதி "இந்தியன் 2" படம் ஓடிடியில் வரும் என்பதுதான் இப்போதைய தகவல்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.