கேஜிஎப் 2 டீசரின் 24 மணி நேர சாதனையை முறியடிக்குமா சலார்?

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே தயாரிப்பு நிறுவனம், அதே இயக்குனர் உருவாக்கத்தில் வரும் "சலார்" படத்தின் டீசர் இன்று அதிகாலையில் வெளியாகியுள்ளது. "கேஜிஎப்" இயக்குனரின் அடுத்த படம், பான் இந்தியா நடிகரான பிரபாஸ் நடித்துள்ள படம் என "சலார்" படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
"கேஜிஎப் 2" டீசரின் சாதனையை "சலார்" டீசர் முறியடிக்குமா என பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபாஸ் நடித்து வெளியான "ஆதிபுருஷ்" படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியான போது அது 24 மணி நேரத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
"கேஜிஎப் 2" சாதனையை மட்டும் "சலார்" முறியடிக்குமா அல்லது "ஆதிபுருஷ்" சாதனையையும் சேர்த்தே முறியடிக்குமா என்பது நாளை காலையில் 24 மணி நேரம் முடியும் போது தெரிய வரும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.