
அரசியலில் நான் இல்லை, ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை: சிரஞ்சீவி
சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணும் அரசியலில் குதித்தார். ‛ஜனசேனா" என்ற புதிய கட்சியைத் துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை" எனப் பேசியுள்ளார். இந்த ஆடியோவால் சிரஞ்சீவி ஏதேனும் கட்சியில் இணையப்போகிறாரா அல்லது தனது சகோதரரின் கட்சிக்காக பிரசாரம் செய்யப் போகிறாரா அல்லது ஜெகன்மோகன் கட்சிக்கோ பா.ஜ.,வுக்கோ பிரசாரம் செய்யப் போகிறாரா என்ற பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சிரஞ்சீவி நடித்துள்ள ‛காட்பாதர்" படம் அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக கூட சிரஞ்சீவி, இந்த அரசியல் வசனம் பேசியிருக்கலாம் எனவும் ஒருசிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தாலும், சிரஞ்சீவியின் இந்த ஆடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!