
அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர்
ஜூன் 07, 20261
Advertisement
தளபதி நடிகர் சி.எம்., ஆகிவிட்டதால், உச்ச நடிகர் பெரிய அளவில், "பீல்" பண்ண துவங்கி விட்டார். காரணம், இவர் அரசியல் கட்சி துவங்கி களமிறங்க தயாரானபோது, "முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவதெல்லாம் நடக்காத காரியம். தேர்தலில் தோல்வியடைந்து அசிங்கப்பட்டு விடாதீர்கள்..." என்று சிலர் அவரை பயமுறுத்தி விட்டனர். அதனால்தான் கடைசி நேரத்தில் அரசியலுக்கு வராமல் அவர் பின்வாங்கி விட்டார்.
தற்போது, முதல் தேர்தலிலேயே தளபதி நடிகர், சி.எம்., ஆகிவிட்டதை அடுத்து, தனக்கு தடை போட்ட சில திரையுலக நண்பர்களை தொடர்பு கொண்டு, "என்னை பயமுறுத்தி நான் முதலமைச்சராவதையே தடுத்து நிறுத்தி விட்டீர்களே. இனிமேல் வாழ்க்கையில் எந்த நண்பர்களின், "அட்வைஸை"யும் நான் கேட்கப்போவதில்லை..." என்று கோபத்தை வெளிப்படுத்தி கொந்தளித்துள்ளார், உச்ச நடிகர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதான், விஜய்யை மக்கள் ஏற்றுக்கொள்ள காரணம் அவர் செல்வாக்கு மற்றும் தன் சினிமா வேலையை (200 கோடி) விட்டு வருகிறேன் என்றதுதான், ஆனால் நீங்க கடைசி காலத்தில் இப்போ வருவது (2020 முதல்)ஏற்றுக்கொள்ள முடியாது. CM ஆவரது அவ்வளவு ஈசியும் இல்ல, இங்க எல்லாரும் விஜய்யா ஆக முடியாது