அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருப்பவர் கவின். டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். "நட்புனா என்னன்னு தெரியுமா" என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானாலும், 2023ல் தியேட்டர்களில் வெளியான "டாடா" படம் வெற்றியாக அமைந்து அவருக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தது. அதற்கு முன்பு ஓடிடியில் வெளியான "லிப்ட்" படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
"டாடா" பிறகு வெளியான "ஸ்டார்" சுமாரான வெற்றியாகவும், அடுத்து வந்த "பிளடி பெக்கர்", சமீபத்தில் வந்த "கிஸ்" தோல்விப் படங்களாகவும் அமைந்தன. "கிஸ்" தோல்வியை சரிக்கட்ட அவர் தற்போது நடித்து வரும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்கள்.
விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் "மாஸ்க்" படத்தின் "கண்ணுமொழி" என்ற பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. அடுத்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின் நடிக்கும் படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.