சிரஞ்சீவி உடன் இணைந்து நடிக்கும் ஷர்வானந்த்
ஆக 01, 2023
Advertisement
கடந்த ஆண்டில் மோகன்லால், பிரிதிவிராஜ் இணைந்து நடித்து நேரடியாக ஓடிடியில் வெளிவந்த படம் " ப்ரோ டாடி". தற்போது இந்த படத்தை தெலுங்கு ரீமேக்கை பங்கராஜூ பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக நடிக்கவுள்ளார். இதில் த்ரிஷா, சித்து ஜோனலகட்டா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது .
இந்த நிலையில் சித்து ஜோனலகட்டா ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு விலகிவிட்டாராம். இதைத் தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இந்த படத்தை சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா தயாரிப்பதாக கூறப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!