
சமந்தா பெற்ற முதல் சம்பளம் 500 ரூபாய்
நேற்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவருடைய முதல் சம்பளம் 500 ரூபாய் என்ற தகவலைப் பகிர்ந்தார். பள்ளியில் படித்து வந்த போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அந்த ரூ.500 சம்பளத்தை வாங்கினாராம்.
தற்போது ஒரு படத்திற்கு 4 கோடி அல்லது 5 கோடி வாங்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் சமந்தா. ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் சொந்த வீடுகள் இருக்கிறது. நான்கைந்து விலை உயர்ந்த கார்கள் இருக்கிறது.
சமந்தா தயாரித்து நாயகியாக நடித்துள்ள "மா இன்டி பங்காரம்" தெலுங்குப் படம் மே 15ம் தேதி வெளியாகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!