சாமி 2 படத்திற்கு ஹிந்தியில் இப்படி ஒரு வரவேற்பா ?
ஜூலை 05, 2021

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் "சாமி 2". 2003ம் ஆண்டு வெளிவந்த "சாமி" படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த இந்தப் படம் வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரி, விக்ரம் இணைந்ததால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இயக்குனர் ஹரி அவருடைய முந்தைய படங்களைப் போல திரைக்கதை அமைக்காமல் ஏமாற்றிவிட்டார்.
தமிழில் இப்படம் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூபில் வெளியிடப்பட்டது. தற்போது 110 மில்லியன் பார்வைகளை இப்படம் பெற்றுள்ளது. தமிழில் தியேட்டர்களில் பார்த்தவர்களை விட ஹிந்தியில் யு டியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
தென்னிந்தியப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட கடும் போட்டி இருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் படங்களுக்கு டிமான்ட் அதிகம். தமிழில் வெளிவந்துள்ள பல ஆக்ஷன் படங்கள் ஹிந்தியில் வெளியாகி அங்கு நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. ஹிந்தி ரசிகர்களுக்கு நடிகர்களைப் பற்றிக் கவலையில், படம் சுவாரசியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.

Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.