விருமன்ஐ விட்டுவிட்டு சர்தார் உடன் மோதத் தயாராகும் பிரின்ஸ்

இவற்றில் "பிரின்ஸ்" பட வெளியீட்டுத் தேதியை தீபாவளிக்கு மாற்றலாமா என யோசித்து வருகிறார்களாம். இந்த வருட தீபாவளிக்கு அஜித் நடிக்கும் 61வது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு தற்போதுதான் ஆரம்பமாகி உள்ளதால் தீபாவளிக்கு படம் வெளிவர வாய்ப்பில்லை. எனவே, "பிரின்ஸ்" படத்தை தீபாவளி நாளில் வெளியிட்டால் கொண்டாட்டமாக இருக்கும் என படக்குழு கருதுகிறதாம்.
தீபாவளி நாளில்தான் கார்த்தி நடிக்கும் மற்றொரு படமான "சர்தார்" படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். எனவே, "விருமன்"ஐ விட்டுவிட்டு "சர்தார்" உடன் மோதலாம் என "பிரின்ஸ்" நினைக்கிறாராம். "டாக்டர், டான்" என அடுத்தடுத்து இரண்டு ஹிட்டுகள் கொடுத்துள்ளதால் சிவகார்த்திகேயன் படம் என்பதால் "பிரின்ஸ்" படத்திற்கு தீபாவளிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.