பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம்

நீண்ட இடைவெளிக்குபின் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் ஒரு படத்தில் நடிக்க போகிறார். இதற்கான பணிகள் நடக்கின்றன. மற்றொருபுறம் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற "கோர்ட் vs ஸ்டேட்" படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்க பிரசாந்த் ஆர்வமாக உள்ளாராம். இதற்காக அவர் மற்ற மொழி நடிகர்கள் சிலரிடம் பேசி வருகிறார். அது எந்த மாதிரியான படம் இயக்குனர், கதை உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!