இனி டாக்டர் ஸ்ரீலீலா

கர்நாடகாவை சேர்ந்த இவர் நடித்துக் கொண்டே எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். இவர்களது குடும்பத்தில் உள்ள அனேக பேர் பெரிய துறையில் பொறுப்பில் உள்ளனர். இதனால் நடித்தாலும் கண்டிப்பாக டாக்டருக்கு படித்து முடிக்க வேண்டும் என அவரது குடும்பத்தில் தெரிவித்திருந்தனர். அதை சவாலாக ஏற்று படிப்பை முடித்துவிட்டார். நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டத்தை ஸ்ரீலீலா பெற்றார். இதுதொடர்பான போட்டோ, வீடியோ வைரலானது. இனி அவர் நடிகை மட்டுமல்ல டாக்டர் ஸ்ரீலீலாவும் தான்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!