ஒரு வழியாக ‛நிறங்கள் மூன்று பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
நவ 02, 2024

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்தையே வெற்றி படமாக்கினார். அதன்பிறகு இவர் இயக்கத்தில் உருவான படம் ‛நரகாசுரன்". 2017ல் உருவான இந்தப்படம் நிதி சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் 7 ஆண்டுகளாக இன்னும் வெளியாகவில்லை. அதன்பின் இவரது இயக்கத்தில் வெளியான ‛மாபியா, மாறன்" ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
அதன்பின் இவர் இயக்கத்தில் உருவான படம் " நிறங்கள் மூன்று". இதில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் இணைந்து பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2022ல் இந்த படம் துவங்கி கடந்தாண்டே ரிலீஸிற்கு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கும் ஒரு சில காரணங்களால் ஏற்பட்ட பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. இப்போது பிரச்னைகளை தீர்த்து ஒருவழியாக ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 22ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.